ஆரோக்கியம்தமிழ்நாடு

உடல் பயங்கரமாக வியர்வை நாற்றம் அடிக்குதா? அப்போ இதையெல்லாம் கடைபிடியுங்கள்!

பார்ப்பதற்கு ஸ்மார்ட்டா டிப் டாப்பா ஆடை அணிந்து மற்றவர்களின் கவனத்தை ஈரத்தாலும் உடலில் ஏற்படும் தூர்நாற்றம் என்பது கொடுமையானது.

நம்மில் பலர் தனது உடலில் துர்நாற்றம் வீசுகிறது என்பதை அறியாமலும் இருக்கிறார்கள், நமது உடலில் கெட்ட வாசனை வீசும் போது பலரும் நம் அருகில் வராமல் நாசுக்காக கர்ச்சீப்பை கொண்டு மூக்கை முடிகொண்டு நிமிடம் பேசுவார்கள்.

இதனால் அவர்கள் நம்மை வெறுக்கிறார்கள் என்று அர்த்தமில்லை, அவர்களுக்கு நம் மீது வீசும் நாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுதான் அர்த்தம்.

நமது உடல் துர்நாற்றத்தை பொருத்து தான் நம்முடைய தன்னம்பிக்கையும் இருக்கிறது. நமது உடல் மற்றும் அக்குளில் வீசும் நாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனென்றால் நமது உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி நமது ஆரோக்கியத்தை வளர்க்க உதவுவது தான் வியர்வை. ஆனால் ஒரு சிலருக்கு இந்த வியர்வை நாற்றத்துடன் வெளியேறும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

பொதுவாக உடற்பயிற்சி மற்றும் விளையாடுபவர்களுக்கு வியர்வை அதிகமாக வெளியேறும். அவர்களின் உடலில் இருக்கும் கலோரிகள் குறைந்த வியர்வை மூலமாக வெளியேறும். ஒரு சிலர் எடுத்துக் கொள்ளும் தவறான உணர்வுகளின் மூலமாக அவர்களின் வியர்வையில் துர்நாற்றம் வீசும்.

அக்குள் மற்றும் இடுப்புப்பகுதி போன்ற பகுதிகளில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியின் காரணமாக உடல் தூர் நாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த இடங்களில் அபோகிரின் வியர்வை சுரப்பிகள் காரணமாக அதிக வியர்வை சுரக்கின்றது. இந்த வியர்வை பாக்டீரியாவிற்கு உணவளிக்கும்போது, ​​அவை மோசமான நாற்றத்தை ஏற்படுத்துகின்றது .

வியர்வை நாக்கம் போக்க எளிய வழிகள்

 • தினசரி குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.
 • இந்த நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கிவிடும்.
 • இதேபோல், குளிக்கும் போது படிகாரத்தை உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றத்தை அது ஓரளவு குறைக்கும்.
 • குளிக்கும் தண்ணீரில் டெட்டால் போட்டு தொடர்ந்து குளித்து வரும்போது, வியர்வை நாற்றம் போய்விடும்.
 • குளித்த பின்னர் உடலில் வாசனை பவுடர்களை நிறைய பூச வேண்டும்.
 • காலை, மாலை இரு வேளைகளிலும் குளிப்பதால் வியர்வை நாற்றத்தை தடுக்க முடியும்.
 • தினமும் சுத்தமாக இருத்தல்
  அக்கிளை பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை உள்ள சோப் உதவியுடன் கழுவுங்கள்.
 • டியோடரன்ட் அல்லது ஆன்டிபெர்ஸ்பெர்ஸ்பிரன்ட் பயன்படுத்தவும்.
 • வியர்வை விரைவில் காயும் வகையில் அக்கிளிலுள்ள முடிகளை நன்கு மழிக்கவும்.
 • உடலில் நன்கு காற்று படும்படியான பருத்தி ஆடைகளை அணியவும்.
 • தூய்மையான ஆடைகளை அணியவும்.

loading...
Back to top button
error: Content is protected !!