ஆரோக்கியம்தமிழ்நாடு

இரத்த சர்க்கரை அளவு அதிகமானால் இந்த உறுப்பு எல்லாம் மோசமா பாதிக்கப்படுமாம்! உஷாரா இருங்க..

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாய் வறட்சி, சோர்வு, காலில் உணர்வின்மை மற்றும் சரும பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

இம்மாதிரியான அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பித்ததால், உடனே இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். அதோடு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும் தவறாமல் எடுக்க வேண்டும்.

எனவே இவற்றை ரெிந்து வைத்து கொள்வது அவசியமானது ஆகும். அந்தவகையில் இரத்த சர்க்கரை அளவு அதிகமானால் எந்த உறுப்பு எல்லாம் மோசமாக பாதிக்கப்படும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

இரத்த நாளங்களின் சேதத்தால் தான் சருமத்தில் கருமையான படலங்கள் உண்டாகின்றன. கழுத்து, கைகள், கால்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கருமையான படலங்கள் காணப்படுவதே சர்க்கரை நோயின் முதல் அறிகுறியாகும்.

சர்க்கரை நோய் இருந்தால், இதய நோய்கள் உருவாவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. உயர் இரத்த சர்க்கரை இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே தான் சர்க்கரை நோயாளிகள் மாரடைப்பு மற்றும் பிற இதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

பாதத்தில் உள்ள நரம்புகளின் சேதத்தால் உருவாவது தான் கால்களில் உணர்வின்மை அல்லது மரத்துப் போதல். இதுவும் சர்க்கரை நோயின் அறிகுறிகளுள் ஒன்று. சர்க்கரை நோயானது இரத்த நாளங்களை தடிமனாக்கி, கால்களில் இரத்த ஓட்டத்தை மோசமாக்குகிறது.

சர்க்கரை நோய் பார்வை திறனை மோசமாக்கி, தீவிர நிலையில் பார்வை இழப்பை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயானது கண்களில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துவதால், கண்களின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, சிறுநீரகமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாமல் இருந்தால், டயாலிசிஸ் தேவைப்படலாம் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம். மொத்தத்தில் உயர் இரத்த சர்க்கரை சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்.

Back to top button
error: Content is protected !!