ஆன்மீகம்தமிழ்நாடு

இந்தக் கனவுகள் மட்டும் உங்களுக்கு வந்தால் உங்கள் தலையெழுத்து மாறுவது நிச்சயம்! குப்பைமேட்டில் இருப்பவர்கள் கூட கோபுரத்தில் ஏறி விடுவார்கள்..

கனவுகள் என்பது நமக்கு வாழ்க்கையில் கிடைத்த வரமாகும். ஒரு சில கனவுகள் நாம் தூங்கி எழுந்த பிறகு மறந்தே போய்விடும். இப்படி மறக்க கூடிய கனவுகள் சாதாரண கனவுகள் தான். ஆனால் எழுந்த பிறகும் நமக்கு அப்படியே நினைவில் இருக்கும் கனவுகள் விசித்திரமானவை. நீங்கள் கவனித்து பார்த்தால் தெரிந்திருக்கும், அந்த மாதிரியான கனவுகள் முழுமையாக நமக்கு நினைவில் நிற்பதில்லை. ஒரு சில விஷயங்கள் மட்டும் நமக்கு வந்து வந்து போகும். அப்படியான கனவுகள் ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்துவதாக கனவு பலன்கள் கூறுகிறது.

night sleep

அந்த வகையில் இந்த மாதிரியான கனவுகள் உங்களுக்கு வந்தால், உங்கள் தலையெழுத்தையே மாற்றக் கூடிய நிகழ்வுகள் நடைபெறும். வறுமையில் வாடியவர்கள் கூட, வசதி வாய்ப்புகளை பெற்று கோடீஸ்வரனாக மாறிவிடுவார்கள். அப்படியான கனவுகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

நீங்கள் தூங்கி எழுந்ததும் என்ன கனவு கண்டீர்கள்? என்பதை ஒரு முறை சிந்தித்து பாருங்கள். அதில் தெரியும் சில உருவங்கள் உங்களுக்கு குறிப்பால் பலவற்றை உணர்த்துகிறது. அவ்வரிசையில் நீங்கள் காணும் கனவில் மகா லட்சுமியின் திருவுருவம் தெரிந்தால், அள்ள அள்ள குறையாத பண சேர்க்கை வரப் போகிறது என்று அர்த்தம். அவ்வளவு எளிதாக மகாலட்சுமி யாருடைய கனவிலும் வந்து விட மாட்டாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

dhanalakshmi

உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து கொண்டு ஏதாவது ஒரு பெண்ணின் உருவம் உங்களுக்கு தெரிந்தால் அது கெடு பலனை கொடுக்கும். அதுவே தங்க, வெள்ளி நகைகள் மட்டும் தெரிந்தால் எதிர்பார்த்த பணம் எங்கிருந்தாவது உங்களுக்கு வரும் என்பது பொருளாகிறது. அது போல் கோமாதா கொடுக்கக் கூடிய பசும்பால் கனவில் வந்தால் செல்வம் கிடுகிடுவென உயரும். வீட்டில் நகைகள் சேர்க்கை அதிகம் உண்டாகும். பணம் அதிகம் ஈட்டக்கூடிய புதிய வழிகள் பிறக்கும் என்பது பலனாக வருகிறது.

உங்களுடைய கனவில் வாசனை மிகுந்த பூக்களை தனியாக காணும் பொழுது உங்களுக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். மகாலட்சுமியின் உடைய அருள் கிடைத்தால் ஆட்டோமேட்டிக்காக உங்களுக்கு பண வரவு சரளமாக நடைபெறும். வருமானம் ஈட்டக்கூடிய எல்லா வகையிலும் இதுவரை நீங்கள் எதிர்பாராத பண வரவு அள்ளிக் கொண்டு வந்து சேர்க்கும்.

coconut

தேங்காயை கனவில் காண்பவர்களுக்கு நிலம் அல்லது நிலம் சார்ந்த விஷயங்களின் மூலம் பண மழை பொழிய விருக்கிறது என்பது அர்த்தம். நிலத்தை வாங்கக் கூடிய யோகமும், அல்லது சொத்துக்கள் விற்பதன் மூலம் உங்களுக்கு லாபமும் கிடைக்கப் போகிறது என்பது பலனாக அமைகிறது.

elephant eye

விநாயகரின் அம்சமாக விளங்கும் யானை கனவில் வந்தால் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும். நீங்கள் சாதிக்க நினைக்கும் விஷயங்கள், அல்லது நீங்கள் அடைய விரும்பும் விருப்பங்கள் வெகு விரைவாக நடைபெற இருப்பதை இந்த கனவு உங்களுக்கு எடுத்துரைக்கிறது. விடா முயற்சிகளுக்கான பலன்களை நீங்கள் அடைய இருக்கிறீர்கள் என்பதை இந்த கனவு பலனாக கூறுகிறது.

Back to top button
error: Content is protected !!