தமிழ்நாடுமாவட்டம்

‘எனது கட்சி ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கணினி வழங்கப்படும்’ – கமல் வாக்குறுதி!

வேலூரில் நடைபெற்ற கட்சி பிரச்சாரத்தின்போது வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சி ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கணிப்பொறி வழங்கப்படும் என மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

கமல் வாக்குறுதி

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை ஒட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது புதிதாக சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பல கட்டங்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, இல்லத்தரசிகளுக்கு மாத சம்பளம் என்ற சில வித்தியாசமான வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்.

கமலின் வாக்குறுதிகளுக்கு ஆதரவுகள் இருந்தாலும் சில எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது. தற்போது வேலூரில் பிரச்சாரம் செய்து வரும் கமல் மற்றுமொரு புதிய வாக்குறுதியை கொடுத்துள்ளார். வேலூரில் குடியாத்தம், காட்பாடி,அணைக்கட்டு பகுதிகளில் கொட்டும் மழையிலும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தொடர்ந்து வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகையில், ‘ மக்கள் நீதி மையத்தின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் கூட இப்போது வியந்து பார்க்கின்றனர். தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கணிப்பொறி வழங்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.

Back to top button
error: Content is protected !!