உலகம்

ஏன் இப்படி என எனக்கு தெரியவில்லை! மன்னித்து விடுங்கள்.. சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞன் கைது

அமெரிக்காவில் 18 வயது இளைஞன் 7 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சிகாகோவை சேர்ந்த Catrell Walls என்ற 18 வயது இளைஞன் 7 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளான்.

இந்த விடயத்தை அறிந்த சிறுமி படிக்கும் பள்ளியின் ஆசிரியைகள் போலீசில் புகார் கொடுத்தனர்.

புகாரையடுத்து போலீசார் Catrell Walls-ஐ கைது செய்துள்ளனர்.

தன் மீதான குற்றத்தை அவர் ஒப்பு கொண்ட நிலையில் Catrellக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் ஏன் இப்படி என தெரியவில்லை, என்னை மன்னித்து விடுங்கள் என Catrell விசாரணையின் போது தங்களிடம் அடிக்கடி கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Back to top button
error: Content is protected !!