மாவட்டம்

மனைவியை பிரிந்த சோகம்.. கணவன் தற்கொலை..

திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சாய்ராம்(52). இவர் கூலி வேலை செய்து வந்திருந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த 4 வருடங்களுக்கு முன் குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை விட்டு பிரிந்து மனைவி சென்றுவிட்டார்.

இதனால் சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த சாய்ராம் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்து இறந்த சாய்ராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!