தமிழ்நாடுமாவட்டம்

மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்.. 3 பேர் கைது..!

கடலூரில் உள்ள எல்.ஆர்.பாளையத்தில் வசிக்கும் மதுசூதனன் (30). இவரின் மனைவி பார்வதி(21). இவர்கள் கடந்த 2018ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அந்த மதுசூதனனுக்கு கடந்த ஓராண்டாக கொரானா ஊரடங்கு காரணமாக சரியான முறையில் வேலையில்லை. அதனால் குடும்ப செலவுக்கு பணமில்லாமல் தவித்தார். அதனால் அவர் அவரின் நண்பர்கள் சுந்தரமூர்த்தி மற்றும் மணிகண்டன் ஆகியோரிடம் கடன் வாங்கியிருந்தார்.

ஆனால் அவரால் வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியவில்லை. அதனால் அந்த நண்பர்கள் இருவரும் அவரிடம் கடனை கேட்டு டார்ச்சர் செய்தனர். அதனால் அவர் தன்னுடைய நண்பர்களிடம் கடனுக்கு பதிலாக தன்னுடைய மனைவியோடு சில நாள் இருந்துவிட்டு போகலாம் என்று கூறினார். அதற்கு அவர்கள் சம்மதித்தார்கள்.
அதனால் அவர் அவரின் மனைவியிடம் விட்டமின் மாத்திரை என கூறி மயக்க மாத்திரையை கொடுத்து மயக்கமடைய செய்துள்ளார்.

அதன் பிறகு அவரின் நண்பர்கள் அவரின் வீட்டிற்கு வந்து அவரின் மனைவியோடு உல்லாசம் அனுபவித்து விட்டு போனார்கள் . சில நாள் கழித்து அவரின் மனைவிக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பார்வதி ஒரு கட்டையை எடுத்து கணவரை தாக்கி உள்ளார். அதன் பிறகு பண்ருட்டியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் மற்றும் அவரது 2 நண்பர்கள் மீது புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரைகளை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: