தமிழ்நாடுமாவட்டம்

25ம் தேதி கரைகடக்கும் “நிவார்” புயல்.. 14 மாவட்டங்களில் கனமழை..

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்து 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். அதனையடுத்து 48 மணி நேரத்தில் புயலாக உருவெடுத்து கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்து உள்ளது. புயலின் காரணமாக தமிழகத்தில் 24ம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கையும், 25ம் தேதி சிகப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88

25ம் தேதி பிற்பகல் மகாபலிபுரம் – காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும். வங்க கடலில் உருவாகி உள்ள இந்த புயலுக்கு “நிவார்“ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 24,25 ஆகிய தேதிகளில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதீத கன மழையும், திருச்சி, அரியலுாா், பெரம்பலுாா், சிவகங்கை, கடலுாா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!