தமிழ்நாடுஇந்தியா

இந்தியாவில் சதம் அடித்த பெட்ரோல் விலை.. வாகன ஓட்டிகள் வேதனை..

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலை அபார உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது இந்தியாவில் பெட்ரோலின் விலை சதம் அடித்து விலையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல்:

கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. மேலும் கடந்த 1ம் தேதி அன்று மத்திய பொது பட்ஜெட் தாக்கலில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கூடுதல் விதியை விதித்தனர். இதனால் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். தற்போது அதுபோலவே விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல் விலையில் 100 ஐ தாண்டியுள்ளது.

மேலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு நாட்டிலையே அதிக வரியை விதிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.99.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மராட்டிய மாநிலத்தின் பர்பானில் ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.100.16 ஆக விற்பனை செய்யப்படுகிது. இதனால் வாகன ஓட்டிகள் வேதனைக்குள்ளாகினர். தமிழ்நாட்டை பொறுத்தவரை பெட்ரோல் லிட்டர் ரூ.91.19 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி பெட்ரோலுக்கு 61 சதவீதம் மற்றும் டீசலுக்கு 56 சதவீதம் வரியை மத்திய மாநில அரசுகள் விதித்தது.

மேலும் கொரோனா காலத்திற்கு பின்பு பெட்ரோல் விலை 19 ரூபாய் 16 காசுகள் உயர்நதுள்ளது. மேலும் டீசல் விலை 16 ரூபாய் 77 காசுகள் உயர்ந்துள்ளது. மேலும் ஒரு வருடத்திற்கு பிறகு கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது. இதுவே பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று கூறுகின்றனர். அதேபோல் தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லாதது போல் தான் தெரிகிறது. மேலும் இன்னும் சில தினங்களில் தமிழகத்திலும் பெட்ரோல் விலை சதமடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!