ஆரோக்கியம்தமிழ்நாடு

உங்க கால் நெருப்பில் வைத்தது போல எரியுதா? இதனை எப்படி தடுக்கலாம்?

பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைகளுள் பாத எரிச்சலும் ஒன்றாகும்.

இது உயர் இரத்த அழுத்தம், வைட்டமின் பி குறைபாடு, உடல் பருமன், குறைவான தைராய்டு அளவு, அதிகப்படியான யூரிக் அமிலம், சர்க்கரை நோய் மற்றும் பலவற்றால் ஏற்படலாம்.

இந்த பாத எரிச்சல் நோயை சரிசெய்வது என்பது சற்று கடினம் தான். இருப்பினும், ஒருசில இயற்கை வழிகளின் மூலம் பாத எரிச்சலைத் தடுக்கலாம்.

பாத எரிச்சலில் இருந்து விடுவிக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை தினமும் பின்பற்றினாலே போதும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • ஒரு டம்ளர் நீரில் 2 டீபூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து தினமும் குடிக்கலாம். சூடான நீரில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து, அந்நீரில் பாதங்களை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீபூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும். அதோடு, மஞ்சளை நீர் சேர்த்து கலந்து, அதை பாதங்களில் ஒரு நாளைக்கு 2 முறை தடவ வேண்டும். ஆனால் இப்படி செய்வதால் பாதங்களில் மஞ்சள் கறை படியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை பாதியளவு நிரப்பி, அதில் பாதி கப் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒரு முறை செய்ய வேண்டும். ஆனால் இந்த முறையைப் பின்பற்றும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்வது நல்லது. ஏனெனில் இம்முறை இரத்த அழுத்தம், இதய நோய் அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பொருத்தமானது அல்ல.
  • பாகற்காய் மற்றும் அதன் இலையை நீர் சேர்த்து அரைத்து, அந்த விழுதை பாதங்களில் தடவ வேண்டும். இப்படி பாதங்களில் எரிச்சலை சந்திக்கும் போது இந்த விழுதை தடவினால், பாத எரிச்சல் தணியும்.
  • ஒரு டீபூன் இஞ்சி சாறுடன், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, கால்களில் தடவி 10-15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை மசாஜ் செய்ய வேண்டும். அதோடு தினமும் இஞ்சி டீ குடிப்பதும், இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவும்.
  • ஒரு வாளியில் பாதியளவு குளிர்ந்த நீரை நிரப்பி, அந்நீரில் பாதங்களை சிறிது நேரம் ஊற வைத்து எடுத்து, பின் சிறிது நேரம் ஓய்வு எடுத்து, மீண்டும் குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்யவும்.

Back to top button
error: Content is protected !!