ஆன்மீகம்

வீடு கட்டும்போது ஏற்படும் தடைகளை எப்படி போக்குவது?

சொந்தமாக சிறிது இடம் வாங்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் உள்ளது. அதற்காக பல வருடங்கள் காத்திருந்து சிறுக சேமித்து ஒரு கட்டத்தில் ஒரு இடமும் வாங்கி சிறிது இடைவெளி விட்டு வீடு கட்ட தொடங்கலாம் என்று முயற்சி செய்யும் போது தான் அடுத்த கட்ட சவால்கள் ஆரம்பிக்கிறது. கட்டிடம் கட்டி தருவதாக சொல்லி பணம் வாங்கியவர் கட்டிடமும் கட்டாமல், பணத்தையும் திருப்பி தராமல் அலைக்கழிக்கும் மனிதர்களிடம் சிக்கி கொள்ளும் நிலை இருக்கும். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று குழம்பிப்போகும் நிலை இருக்கும்.

சுக்கிரன் இயல்பு

ஏன் இப்படி நடக்கிறது என்பதற்கு விடையாக அவர்கள் தொடங்கிய நாளில் கேதுவின் ஆதிக்கம் உள்ள நாளாக இருந்திருக்கும். கேதுவின் இயல்பு தடையை ஏற்படுத்துவது. சனியின் இயல்பு தாமதத்தை ஏற்படுத்துவது. செவ்வாயின் இயல்பு பூமி, கட்டடம் போன்ற விஷயங்களில் துரிதமாக செயல்படுவது, குருவின் இயல்பு பெரிய விசாலமான வீடு கொடுப்பது, சுக்கிரன் இயல்பு வாகனம் நிறுத்தும் அளவிற்காவது தாராளமான இடம் கொண்ட ஒரு சொந்த வீட்டை தருவது.

குல தெய்வ அருள்

பெரும்பாலும் 3-ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கும், 6-ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கும் சொந்த வீடு சார்ந்த பிரச்சனை வருவதில்லை. 3-ஆம் எண்ணில் பெயர் உள்ளவர்களுக்கும், 6-ஆம் எண்ணில் பெயர் உள்ளவர்களுக்கும் பணம் பற்றாக்குறைக்கு அவ்வப்போது காணப்பட்டாலும் உடனடியாக இந்த பணம் சார்ந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும். அப்படி இல்லாமல் மாறாக இருந்தால் வேறு எதிர்மறையான மனிதர்களின் சூழ்ச்சிகளில் சிக்கி இருப்பார்கள். இவர்களுக்கு முன்னோர் அல்லது குல தெய்வ கடாட்சம் இல்லாமல் இருக்கலாம்.

சோடசக்கலை

இவ்வாறு சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் வலிமை மிகுந்த சோடசக்கலையை இவர்கள் தொடர்ந்து பின்பற்றி வருவது நல்லது. எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கும் செயற்கை தடைகளை மாற்றி அமைக்கும் சக்தி சோடசக்கலைக்கு உண்டு.

இதையும் படிங்க:  பூ விழுங்கும் அதிசய விநாயகர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: