உலகம்

அண்ணனை எப்படி திருமணம் செய்வது? திருமணத்தில் நடந்த தலைசுற்றவைக்கும் சம்பவம்..!

சீனாவில் தனது மகன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த தாய் தனது வருங்கால மருமகள் உண்மையில் தனது வயிற்றில் பிறந்த மகள் என்ற உண்மையை அறிந்து கொண்டுள்ளார்.

Suzhou நகரில் தான் இந்த ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தாயார் ஒருவர் தமது மகன் திருமணத்தில் கலந்து கொண்டார்

மருமகளை வரவேற்கும் வேளையில், பெண்ணின் கையில் மச்சத்தைப் போன்ற ஒரு பிறவிக்குறி இருப்பதை அவர் கவனித்தார்.

அப்போது தாயாருக்கு திடீரெனச் சந்தேகம் ஏற்பட்டது. அதாவது பல ஆண்டுகளுக்கு முன், காணாமற்போன அவரது சொந்த மகளுக்கும் அதே போன்றதொரு அடையாளம் கையில் இருந்தது.

இது குறித்து அவர் உடனடியாக சம்பந்திகளிடம் விசாரித்தார். அப்போது தான் அந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது. அதன்படி மணப்பெண், உண்மையில் அவர்களுடைய வளர்ப்பு மகள் என்றும் பெற்றெடுத்த மகள் இல்லை என்றும் சம்பந்திகள் விளக்கினர்.

இதை தொடர்ந்து மணப்பெண் தனது உண்மை தாயாரை கட்டிபிடித்து அழுதார். மேலும் எப்படி தனது சகோதரரை திருமணம் செய்து கொள்வது என குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்தார். அப்போது தான் அவர் தாயார் மீண்டும் ஒரு ட்விஸ்ட் வைத்தார்.

அதாவது, மகள் சிறு வயதில் காணாமல் போனதால் தனது மகனான இளைஞனை தத்தெடுத்ததாகவும், அவர் தனது வயிற்றில் பிறந்தவர் இல்லை எனவும் கூறினார்.

இதனால் இருவரும் இரத்த சம்மந்தமான உடன்பிறப்புகள் இல்லை என்பதால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் பிரச்சினை இல்லை என கூறிய நிலையில் மணப்பெண் மகிழ்ச்சியடைந்தார்.

இதன் பின்னர் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: