பொழுதுபோக்கு

டேஸ்ட்டியான தந்தூரி சிக்கன் செய்வது எப்படி..?

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான தந்தூரி சிக்கன் ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – அரை கிலோ
தயிர் – கால் கப்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலாத் தூள்- 2 ஸ்பூன்
எலுமிச்சம்பழம் – 1
சீரகம் – ½ ஸ்பூன்,
இஞ்சி – பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு

செய்முறை

சிக்கன் துண்டுகளை கத்தியால் கீறிக் கொள்ளவும்.
அடுத்து சீரகம், இஞ்சி- பூண்டு பேஸ்ட், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், உப்பு மற்றும் தயிர் கலந்து ஊற வைக்கவும்.

அடுத்து கம்பி வலையினை அடுப்பில் வைத்து சிக்கனைப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

அடுத்து வேகவைத்த சிக்கன் மீது எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிட்டு இறக்கினால் தந்தூரி சிக்கன் ரெடி…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: