பொழுதுபோக்குதமிழ்நாடு

டேஸ்ட்டியான சீலா மீன் குழம்பு செய்வது எப்படி?..

இதுவரை நாம் பாறை மீன், நெத்தில் மீன், சுறா மீன் போன்றவற்றில் குழம்பு செய்வது எப்படி என்று பார்த்திருக்கிறோம். இப்போது சீலா மீனில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • சீலா மீன்- 500 கிராம்
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • பூண்டு – 1
  • புளி – எலுமிச்சை அளவு
  • தனியாத்தூள் – 2 ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
  • கடுகு – சிறிதளவு
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • வெந்தயம்- ½ ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • உப்பு- தேவையான அளவு,
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

புளியை தண்ணீரில் போட்டு ஊறவிட்டு கரைத்துக் கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் போன்றவற்றைப் போட்டு தாளித்து வெங்காயம் பூண்டு தக்காளி, கறிவேப்பிலை போன்றவற்றைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

பின்னர் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு மீன் துண்டுகளை சேர்த்து வேகவிடவும்.
இறுதியில் கறிவேப்பிலை தூவி இறக்கினால் சீலா மீன் குழம்பு ரெடி.

Back to top button
error: Content is protected !!