தேவையான பொருட்கள்:
- ஆட்டுக்கறித் துண்டுகள் – 500 கிராம்
- சிகப்பு மிளகாய் – 25
- சின்ன வெங்காயம் – 150 கிராம்
- சோம்பு – 2 மேஜைக்கரண்டி
- சீரகம் – 2 மேஜைக்கரண்டி
- மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு – அரை தேக்கரண்டி
- பூண்டு – 4 பல்
- கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – 50 மில்லி லிட்டர்
செய்முறை:
கறி மிகவும் சிறு துண்டுகளாக இருப்பது அவசியம்.
கறியுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
மிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் பூண்டை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
சோம்பு மற்றும் சீரகத்தை வறுத்து, ஆறியபின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, மிளகாய், உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கறித் துண்டுகளைப் போட்டு கிளறவும்.
அரைத்து வைத்துள்ள சோம்பு — சீரகக் கலவை, மிளகாய்த்தூள் போட்டுக் கிளறி விடவும்.
உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
கறி வெந்து, சிவக்க வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh