தமிழ்நாடுபொழுதுபோக்கு

டேஸ்டியான கப் கேக் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • மைதாமாவு – 150 கிராம்
  • வெண்ணெய் – 90 கிராம்
  • சர்க்கரை (Sugar) – 90 கிராம்
  • முட்டை – 2
  • பேக்கிங் பவுடர் (Baking Powder) – அரை தேக்கரண்டி
  • வெனிலா எஸென்ஸ் – 3 சொட்டுகள்

செய்முறை:

மைதாமாவையும், பேக்கிங்பவுடரையும் சலித்துக் கொள்ளவும்.

வெண்ணெயையும், சர்க்கரையையும் Electrical Blender — பயன்படுத்தி நன்றாக அடித்துக் கொள்ளவும்.

முட்டைகளை வெள்ளைக்கரு தனியாகவும், மஞ்சள்கருவை தனியாகவும் பிரித்து நன்றாக அடித்து கலக்கி, வெண்ணெய்—சர்க்கரையுடன் கலந்து நன்றாக கலக்கவும்.

இந்தக் கலவையுடன் மைதாமாவு பால் மற்றும் வெனிலா எஸென்ஸ் கலந்து, லேஸாக ஒரே பக்கமாக கிளறவும்.

கேக் வேக வைக்கும் சிறு சிறு கிண்ணங்களில் வெண்ணெய் தடவி, மைதா மாவு தூவிய பின் மைதாமாவு தூவிக் கொள்ளவும்.

கேக் மாவை கிண்ணங்களில் ஊற்றி மாவு சமமாக பரவுவதற்காக கிண்ணங்களை லேஸாக தட்டிக் கொள்ளவும்.

கிண்ணங்களை அவன்—ல் (Oven) வைத்து 20 நிமிடங்கள் ஆன பின் வெந்தது பார்த்து, எடுக்கவும்.

ஓரளவு ஆறியபின் எடுத்து பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: