பொழுதுபோக்கு

டேஸ்டியா மிக்ஸ் ஃப்ரூட் புட்டிங் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • சைனா க்ராஸ் – 10 கிராம்
  • சர்க்கரை (Sugar) – 2 கப்
  • ஆப்பிள் – 1
  • பதப்படுத்தப்பட்ட அன்னாசிப்பழத் துண்டுகள் (Preserved Pineapple) – 1 டின்
  • சாத்துக்குடி சுளைகள் – 10
  • பேரீச்சம்பழம் (Seedless) – 6
  • கன்டென்ஸ்ட் மில்க் (Condensed Milk) – 3 டின்
  • பால் – 1 கப்

செய்முறை:

1 கப் தண்ணீரில் சைனா க்ராஸ்ஸை ஊற வைத்துக் கொள்ளவும்.

ஆப்பிளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

1 கப் சர்க்கரையை தண்ணீர் சேர்த்து சூடாக்கி இளம்பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

மீதமுள்ள சர்க்கரையை தூளாக்கிக் கொள்ளவும்.

பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

சர்க்கரை பாகுடன் ஆப்பிள் துண்டுகள், மற்றும் சாத்துக்குடி சுளைகளைப் போட்டு, பழங்கள் வெந்ததும் பேரீச்சம் பழத்தைப் போடவும்.

அதன்பின் ஒரு பாத்திரத்தில் அன்னாசிப்பழத் துண்டுகளை பரவலாக போட்டு வைத்துக் கொள்ளவும்.

கன்டென்ஸ்ட் மில்க்குடன் தூளாக்கியுள்ள சர்க்கரை போட்டு கலந்து, 1 மணி நேரம் தனியே வைக்கவும்.

அதன்பிறகு, கன்டென்ஸ்ட் மில்க் கலவையுடன் பால் சேர்த்து, மிதமான தீயில் வைத்து கிளறி விடவும். (கொதிக்க விடக் கூடாது.) அதன்பின் இறக்கி வைக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் (Pan) சைனா க்ராஸ் கலவையை லேஸாக சூடேற்றி, கட்டி இல்லாமல் மிக கவனமாகவும், மெதுவாகவும் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.

கன்டென்ஸ்ட் மில்க் கலவை ஓரளவு ஆறியதும் சைனா க்ராஸ்ஸை மில்க் கலவை மீது ஊற்றவும்.

20 நிமிடங்கள் ஆனபின் அன்னாசிப்பழத் துண்டுகள் பரவலாக போட்டு வைத்துள்ள பாத்திரத்தில் சர்க்கரைப்பாகு — பழக்கலவையை ஊற்றி சிறிது நேரம் கழித்து ஃப்ரிட்ஜ்—ல் குளிர வைத்து, பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: