தேவையான பொருட்கள்:
- ஆட்டுக்கறி – 500 கிராம்
- பாஸ்மதி அல்லது சீரகசம்பா அரிசி – 500 கிராம்
- இஞ்சி—பூண்டு அரைத்தது – 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை – 3 தேக்கரண்டி
- புதினா இலை – 3 தேக்கரண்டி
- கசகசா – 2 தேக்கரண்டி
- தேங்காய் – 1 மூடி
- சோம்பு – 1 தேக்கரண்டி
- பட்டை – 3 துண்டு
- கிராம்பு – 3
- ஏலக்காய் – 2
- பச்சை மிளகாய் – 6
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
- தயிர் – 3 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 2
- உப்பு – தேவையான அளவு
- நெய் – 2 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
செய்முறை:
கறியை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
கறி வேக வைத்த தண்ணீரை எடுத்து தனியே வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
தேங்காயைத்துறுவி 2 மேஜைக்கரண்டி தேங்காய்த்துறுவலை கசகசாவுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள தேங்காய் துறுவலில் 2 கப் பால் எடுத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், புதினா இலை, கொத்தமல்லி இலை போட்டு வதக்கவும்.
அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் வேக வைத்துள்ள கறித்துண்டுகளைப் போட்டு, கசகசா அரைத்தது, தயிர் சேர்த்துக் கிளறவும்.
5 நிமிடங்கள் ஆனதும் கறிவேக வைத்த தண்ணீர், தேங்காய்ப்பால் சேர்த்து 4 கப் இருக்கும்படி ஊற்றவும். கறிவேக வைத்த தண்ணீர் குறைவாக இருந்தால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
உப்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டுக் கிளறி விடவும்.
கொதித்ததும் அரிசியைப் போட்டு கிளறி விட்டு, மூடி வைத்து தீயை மிதமாக்கவும்.
அரிசி வெந்ததும், திறந்து நெய் ஊற்றி, நன்றாக கிளறி இறக்கி மூடி வைக்கவும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh