பொழுதுபோக்கு

பஞ்சாபி ஆலு கி லவுஞ்சி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 4,சோம்பு – ஒரு டீஸ்பூன்,

வெந்தயக்கீரை – 2 கட்டு (சுத்தம் செய்து, நறுக்கவும்),

கெட்டி புளிக்கரைசல் – கால் கப்,

எண்ணெய் – அரை டீஸ்பூன்,

சர்க்கரை, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்,

பஞ்சாபி மசாலா பொடி – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

பஞ்சாபி மசாலா பொடி செய்ய:

சோம்பு – ஒரு டீஸ்பூன்,

மல்லி (தனியா) – ஒரு கப்,

கிராம்பு, ஏலக்காய் – தலா 5,

சீரகம் – அரை கப்,

கடலைப்பருப்பு, மிளகு – தலா 2 டீஸ்பூன்,

பட்டை – சிறுதுண்டு

செய்முறை:

முதலில் இவற்றை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, மிக்ஸியில் அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கவேண்டும்.

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு அதில் சோம்பு, நறுக்கிய வெந்தயக்கீரை சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உருளைக்கிழங்கு துண்டுகள் சேர்க்கவேண்டும்.

பின்பு இதனுடன் உப்பு, சர்க்கரை, மஞ்சள்தூள், 2 டீஸ்பூன் பஞ்சாபி மசாலா பொடி சேர்த்து நன்கு கொதித்ததும் அடுப்பை அணைக்க வேண்டும். சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: