பொழுதுபோக்குதமிழ்நாடு

பாஸ்தா பாயசம் செய்வது எப்படி?..

‘எல்லாமே திறந்தாச்சு. எப்போ எங்க ஸ்கூலை திறப்பாங்க’ என்று கேட்டுக்கொண்டே வீட்டுக்குள்ளே வலம்வரும் குழந்தைகள் விதம் விதமாக சமைத்து தரச்சொல்லி சில நேரம் அடம்பிடிப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ரிலாக்ஸ் டைமில் சற்றே வித்தியாசமான இந்த பாஸ்தா பாயசம் செய்து கொடுக்கலாம்.

செய்முறை

அடிகனமான அகன்ற பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில் முக்கால் கப் பாஸ்தாவைச் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை வேக விடவும். வெந்ததும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும். பின்பு மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றி தேவையான அளவு முந்திரி, உலர் திராட்டை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். வறுத்த முந்திரி, உலர் திராட்டைகளை வடிகட்டி எடுத்துவிட்டு அந்த பாத்திரத்தில் இரண்டு கப் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் வேகவைத்த பாஸ்தாவைச் சேர்க்கவும். பால் சுண்ட ஆரம்பிக்கும் வேளையில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் அரிசி மாவை கட்டியில்லாமல் கரைத்து பாலில் சேர்த்து கிளறவும். கலவை நன்றாகக் கொதித்து வரும்போது வறுத்த முந்திரி, ஏலக்காயைச் சேர்க்கவும். அடுப்பிலிருந்து இறக்கி அரை கப் வெல்லப்பாகை சேர்த்து கலக்கவும். அருமையான பாஸ்தா பாயசம் ரெடி.

சிறப்பு

பாஸ்தாவில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது. இது வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

Back to top button
error: Content is protected !!