நேந்திரம் பழ அல்வா செய்வது எப்படி?..

பசியெடுக்கும் ரிலாக்ஸ் டைமில் சில பொருள்களை மட்டுமே பயன்படுத்தி, சுவையாக இருக்கும் உணவுகளைச் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்குபவர்களுக்கு உதவும் இந்த நேந்திரம் பழ அல்வா!
செய்முறை
நன்கு பழுத்த மூன்று நேந்திரம் பழங்களின் தோலை உரித்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 200 கிராம் வெல்லத்தை நன்கு பொடித்துக்கொள்ளவும். ஒரு கனமான கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டுச் சூடானதும் பொடியாக நறுக்கிய பழத்தைப்போட்டு, பழம் நன்கு மசிந்து வரும் வரை கைவிடாமல் வதக்கவும். பழம் நன்கு வெந்ததும் துருவிய வெல்லத்தைப் போட்டு மேலும் சிறிது சிறிதாக நெய்விட்டு வெல்லம் நன்கு கரைந்து பழத்தோடு சேரும் வரை கைவிடாமல் கிளறவும். அல்வா கடாயில் ஒட்டாமல் நெய் மிதக்கும் வரும்வரை கிளறி இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.
சிறப்பு
நேந்திரம் பழம் மற்றும் வெல்லம் ஆகிய இரண்டு பொருட்களிலும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இந்த அல்வா எல்லா வயதினருக்கும் ஏற்றது.