பொழுதுபோக்கு

மாம்பழ ஸ்குவாஷ் செய்வது எப்படி..?

ஒரு கப் மாம்பழத் துண்டுகளில் 100 கலோரி ஆற்றல் உள்ளதால் அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் பழமாகவும் மாம்பழம் உள்ளது. மாம்பழத்தைத் துண்டுகளாக்கி சாப்பிட்டு சலிப்படையும் நேரத்தில் இந்த மாம்பழ ஸ்குவாஷ் செய்து அருந்து புத்துணர்ச்சி பெறலாம்.

செய்முறை

நன்கு பழுத்த மாம்பழங்களிலிருந்து இரண்டு கப் மாம்பழக்கூழை எடுத்துக்கொள்ளவும். நான்கு கப் சர்க்கரையும் இரண்டு கப் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டி டிபார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கும் ஒரு டீஸ்பூன் சிட்ரிக் ஆசிட்டை சேர்த்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.

இத்துடன் மாம்பழக்கூழைச் சேர்த்துக் கலக்கி, சில துளிகள் மேங்கோ எசென்ஸ் மற்றும் இரண்டு சிட்டிகை கேசரி ஃபுட் கலர் சேர்த்துக் கலக்கவும். இதை பாட்டில்களில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து தேவையானபோது ஐஸ்கட்டி, தண்ணீருடன் கலந்து பருகலாம்.

சிறப்பு

ஒரு மாம்பழம் ஒரு நாளுக்குத் தேவையான வைட்டமின் சி, 35 சதவிகிதம் வைட்டமின் ஏ மற்றும் 12 சதவிகிதம் நார்ச்சத்தை அளிக்கக்கூடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: