பொழுதுபோக்கு

கடாய் சிக்கன் வீட்டிலேயே செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • கோழிக்கறி – 500 கிராம்
  • தனியாத்தூள் – 3 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
  • இஞ்சி—பூண்டு அரைத்தது – 2 தேக்கரண்டி
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி

செய்முறை:

கோழிக்கறியை சுத்தம் செய்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.

அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது, கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.

தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டுக் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போடவும்.

கோழிக்கறி வெந்து, கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக்காய் வறுவல்!
Back to top button
error: