பொழுதுபோக்கு

ஜவ்வரிசி பாயஸம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • ஜவ்வரிசி – 250 கிராம்
  • சர்க்கரை (Sugar) – 300 கிராம்
  • முந்திரிப்பருப்பு – 20
  • குங்குமப்பூ – 3 சிட்டிகை
  • கிஸ்மிஸ் – 20
  • பால் – 500 மில்லி லிட்டர்
  • நெய் – 3 மேஜைக்கரண்டி
  • ஏலக்காய் பொடி – அரை தேக்கரண்டி

செய்முறை:

ஜவ்வரிசியை வேக வைத்துக் கொள்ளவும்.

வெந்ததும் இறக்கி வைத்து, இத்துடன் சர்க்கரை போட்டுக் கிளறி வைக்கவும்.

வாணலியில் 1 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸை வறுத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் பால் ஊற்றி, இத்துடன் வேக வைத்த ஐவ்வரிசி — சர்க்கரைக் கலவையை ஊற்றி, கொதிக்க விடவும்.

பாயஸப்பதம் வந்ததும், வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, மீதமுள்ள நெய் ஊற்றிக் கிளறி இறக்கி பரிமாறவும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  குழந்தைகளுக்குப் பிடித்தமான ஆலு சப்பாத்தி!
Back to top button
error: