பொழுதுபோக்குதமிழ்நாடு

ஆரோக்கியம் நிறைந்த தேங்காய் உருண்டை செய்வது எப்படி?..

புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. இப்போது டிபார்ட்மென்டல் கடைகளில் உலர் தேங்காய்த்துருவல் கிடைக்கின்றன. அதைக்கொண்டு ரிலாக்ஸ் டைமில் எளிதாகச் செய்யக்கூடிய இந்தத் தேங்காய் உருண்டைகளைச் செய்துகொடுத்து உங்கள் குட்டீஸின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

செய்முறை

ஒன்றரை உலர் தேங்காய்த்துருவலோடு 50 கிராம் கண்டன்ஸ்டு மில்க், கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும். இதன்மீது, சிறிதளவு பாதாம்பருப்பு அல்லது முந்திரிப்பருப்பு சேர்த்து டாப்பிங் போல செய்து கொள்ளவும். தயாரித்த இந்த உருண்டைகளை, சிறிதளவு தேங்காய்த்துருவலில் புரட்டியெடுத்தால் தேங்காய் உருண்டைகள் தயார்.

சிறப்பு

உடற்சூட்டைக் குறைத்து, குளிர்ச்சி தரவல்லது. அல்சர், வயிற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் தேங்காய் உருண்டை நல்ல பலனைத்தரும்.

Back to top button
error: Content is protected !!