பொழுதுபோக்கு

சுவையான ரவை பணியாரம் செய்வது எப்படி..?

ரவையில் நாம் இப்போது சுவையான பணியாரம் ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

ரவை – 100 கிராம்
அரிசி- 100 கிராம்
உளுந்து – 70 கிராம்
வெந்தயம் – ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கடுகு – ¼ ஸ்பூன்
சீரகம் – ¼ ஸ்பூன்
உளுந்து – ½ ஸ்பூன்
கடலைப்பருப்பு – ½ ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை

அரிசி, உளுந்து வெந்தயம் அனைத்தையும் சுத்தம் செய்து 5 மணி நேரம் நீரில் ஊற வைத்து அரைக்கவும்.
அடுத்து அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து நன்கு புளிக்கவிடவும்.

மறுநாள் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து தாளித்த கலவை மற்றும் அதனுடன் ரவை சேர்த்துக் கலந்து பணியாரக் கல்லில் ஊற்றி வேகவிட்டு எடுத்தால் ரவை பணியாரம் ரெடி…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: