தமிழ்நாடுபொழுதுபோக்கு

சுவையான குல்ச்சா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • கோதுமை மாவு – 1 கப்
  • (Yeast) ஈஸ்ட் – 1 தேக்கரண்டி
  • சர்க்கரை (Sugar) – 1 சிட்டிகை
  • உப்பு – அரை தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஈஸ்ட்டை 2 மேஜைக்கரண்டி வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து, சர்க்கரை சேர்த்து, 10 நிமிடங்கள் ஊற விடவும்.

கோதுமை மாவுடன் உப்பு, ஊற வைத்துள்ள ஈஸ்ட் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மிருதுவாகப் பிசைந்து ஈரமான துணியை மாவின் மீது போட்டு 20 நிமிடங்கள் ஊற விடவும்.

இதனால் மாவு இரட்டிப்பாகும்.

இதன்பிறகு மாவை லேஸாக கையினால் அழுத்தி விடவும்.

மாவை 5 பாகங்களாக பிரித்துக் கொள்ளவும்.

மாவை 125 m.m. Non—Stick—Pan—ல் தேய்த்ததை ஒவ்வொன்றாக போட்டு, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: