பொழுதுபோக்கு

சுவையான பீர்க்கங்காய் சட்னி செய்வது எப்படி..?

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

பீர்க்கங்காய் – 1
வெங்காயம் – 1
தக்காளி – 1
புளி – 1 நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் – 6
உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க :

கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் பீர்க்கங்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.

பின்பு நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காய், புளியையும் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்க வேண்டும். பிறகு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்ற சுவையான பீர்க்கங்காய் சட்னி தயார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: