தமிழ்நாடுபொழுதுபோக்கு

சுவையான ஆப்பிள் அல்வா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • ஆப்பிள் – 2
  • சர்க்கரை (Sugar) – 1 மேஜைக்கரண்டி + 2 கப்
  • பாதாம்பருப்பு – 15
  • பால் – 2 அரை கப்
  • குங்குமப்பூ – 2 சிட்டிகை
  • நெய் – 2 மேஜைக்கரண்டி
  • நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு,
  • கிஸ்மிஸ் – தேவையான அளவு

செய்முறை:

  • ஆப்பிளை தோல் நீக்கி துறுவிக் கொள்ளவும்.
  • பாதாம்பருப்பை ஊற வைத்து தோல் நீக்கிய பின் ½ கப் பாலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் ஆப்பிள் துறுவல் மற்றும் 1 மேஜைக்கரண்டி சர்க்கரை 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும். வேக வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த பாதாம்பருப்பு—பால், குங்குமப்பூ இவற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றவும்.
  • 3 நிமிடங்கள் கொதித்ததும் வேக வைத்துள்ள ஆப்பிள் கலவையைப் போட்டு, கிளறுவதை நிறுத்தாமல் கிளறவும்.
  • அல்வா பதம் வந்ததும் நெய், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் இவற்றைப் போட்டுக் கிளறி இறக்கி ஆறியதும் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: