தேவையான பொருட்கள் :
- பெரிய நண்டு – 6
- சிகப்பு மிளகாய் – 6
- தனியாத்தூள் – 2 தேக்கரண்டி
- இஞ்சி—பூண்டு அரைத்தது – 2 தேக்கரண்டி
- தேங்காய்த்துறுவல் – 3 மேஜைக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2
- தக்காளி – 1
- கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
- மஞ்சள்தூள் – 3 சிட்டிகை
- சின்ன வெங்காயம் – 10
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
செய்முறை :
நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.
தேங்காய்த்துறுவல், தனியாத்தூள், வெங்காயம், சிகப்பு மிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கி, பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வதக்கியபின் அரைத்த மஸாலா, மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் போடவும்.
அதன்பின் நண்டைப் போட்டுக் கிளறி விடவும்.
நண்டு வெந்து, மஸாலா கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh