பொழுதுபோக்குதமிழ்நாடு

சோள ரவை புட்டு செய்வது எப்படி?..

பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத பலம் தரும் உணவு புட்டு. இந்த சோள ரவைப் புட்டில் உடலுக்குத் தேவையான புரதச்சத்து, இரும்பு, கால்சியம் அடங்கி இருப்பதால், அனைவரும் சாப்பிடலாம். வயிறு தொடர்பான பிரச்னைகள், மலச்சிக்கல் நீங்கும்; உயிர் அணுக்களின் எண்ணிக்கை உயரும்.

தேவையான பொருட்கள்

சோள ரவை – ஒரு கப்

நாட்டுச் சர்க்கரை – அரை கப்

தேங்காய்த் துருவல் – கால் கப்

நெய் – ஒரு டீஸ்பூன்

பூசணி விதை, முந்திரி, பாதாம் – துருவல் ஒரு ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

செய்முறை

சோள ரவையைக் கடாயில் வறுத்துக்கொள்ளவும். இதில், வெது வெதுப்பான உப்பு நீர் தெளித்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பிறகு, நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் பூசணி விதை, பாதாம், முந்திரி, ஏலக்காய்த் தூள் சேர்த்து வறுத்துக் கிளறி, சாப்பிடவும்.

Back to top button
error: Content is protected !!