பொழுதுபோக்குதமிழ்நாடு

செலரி வெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படி?..

நம் ஊரில் கொத்தமல்லியை உணவில் பயன்படுத்தப்படுவதைப்போல செலரி கீரை சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்தியாவில் எல்லா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது. மிகவும் நறுமணமுள்ள செலரியை வெங்காயத்தாளுடன் சேர்த்து பச்சடி செய்தால் மணமும் ருசியும் சேர்ந்து ரிலாக்ஸ் டைமை இதமாக்கும்.

செய்முறை

ஒரு கட்டு வெங்காயத்தாள், ஒரு கொத்து செலரி, மூன்று பச்சை மிளகாயை நன்றாக கழுவி நீரை துடைத்து விட்டு பொடியாக நறுக்கவும். சிறிதளவு இஞ்சியைத் தோல் சீவி தட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு கப் தயிரைக் கடைந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, அரை கப் தக்காளி சாஸ், கீரைகள், பச்சை மிளகாய் மற்றும் தட்டிவைத்த இஞ்சியை போட்டு நன்கு கலக்கவும். சுவையான செலரி வெங்காயத்தாள் தயிர் பச்சடி தயார்.

சிறப்பு

வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்கும். உணவு செரிமானமின்மை, பலவீனம், சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், தூக்கமின்மை, மூட்டு வாதம், ஊளைச்சதை, நரம்புக்கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம் முதலிய நோய்களை செலரி குணப்படுத்தும்.

Back to top button
error: Content is protected !!