பொழுதுபோக்கு

கருவேப்பில்லை பொடி செய்வது எப்படி?

கண் பார்வைக்கு உதவும் கருவேப்பில்லை பொடி. இது தலை முடி கொட்டுவதையும் நிறுத்தும்.

தேவையான பொருள்கள்

கருவேப்பில்லை – 2 பிடி

துவரம் பருப்பு – கால் ஆழாக்கு

உளுத்தம் பருப்பு – கால் ஆழாக்கு

காய்ந்த மிளகாய் – 30 (அல்லது அவரவருக்கு காரம் தேவையான அளவு)

பெருங்காயம் – 1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

செய்முறை

காய்ந்த மிளகாயை காம்பு எடுத்து வைத்துக் கொள்ளவும். பருப்புகளை சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கருவேப்பிலையை தீய விடாமல் சிவப்பாக வரும் வரையில் சிறிது வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு அதே வாணலியில் காய்ந்த மிளகாய், பருப்புகள், பெருங்காயம் ஆகிய இவற்றையும் போட்டு தனித்தனியாக பொன்னிறமாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.

இப்போது முதலில் கருவேப்பில்லையையும், உப்பையும் மிக்சியில் வைத்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.

அதன் பிறகு நீங்கள் வறுத்த இதர சாமான்கள் அனைத்தையும் வைத்து ஒன்றாக சேர்த்து மீண்டும் பொடி செய்து கொள்ளவும்.

இதோ இப்போது சுவையான கருவேப்பில்லை பொடி தயார். இதனை சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

மருத்துவ நன்மைகள்

ஆயுர்வேத மருத்துவத்தில் கருவேப்பிலை சிறந்த நோய் நிவாரணி. இது நீரிழிவை எதிர்க்கும், நுண்ணுயிர் கொல்லியாகும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஆந்திரா ஸ்பெஷல் சிட்லம் பொடி.. எப்படி செய்வது?
Back to top button
error: