தமிழ்நாடுபொழுதுபோக்கு

கருப்பட்டி திரட்டுப்பால் செய்வது எப்படி?..

நம் தமிழ்நாட்டு மக்களோடு ஒன்றிணைந்த கருப்பட்டி பயன்பாடு சர்க்கரை வந்த பிறகு பெரும்பாலும் குறைந்து விட்டது. தற்போது மீண்டும் மக்களிடம் கருப்பட்டி பயன்பாடு அதிகரித்து உள்ளதன் காரணமாக அதுகுறித்த விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் ஹோட்டல்களில் ஸ்பெஷல் ரெசிப்பியாக விளம்பரப்படுத்தப்படும் கருப்பட்டி திரட்டுப்பால். எளிதாகச் செய்யக்கூடிய இதை வீட்டிலேயே செய்து ரிலாக்ஸ் டைமில் பரிமாறுங்கள்.

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி, அடுப்பில்வைத்து பால், பாதியாக சுண்டுகிற வரைக்கும் காய்ச்சவும். 200 கிராம் கருப்பட்டியைப் பொடித்து, தண்ணீரில் கரைத்துவைத்துக் கொள்ளவும். அந்தத் தண்ணீரை வடிகட்டி, சுண்டிய பாலில் சிறிதளவு சிறிதாக ஊற்றவும். நன்கு திரண்டுவரும். கரண்டியால் அதிகம் கிளற வேண்டாம். தீயை மிதமாகவைத்து நன்கு சுண்டியதும் இறக்கவும். சுவையான திரட்டுப்பால் தயார்.

சிறப்பு

கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

Back to top button
error: Content is protected !!