பொழுதுபோக்கு

பீட்ரூட் குச்சி சிப்ஸ் செய்வது எப்படி..?

உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும் தன்மை பீட்ரூட்டுக்கு உண்டு. பீட்ரூட்டில் பொரியல் செய்து வைத்தால் ஒதுக்குபவர்களும் இந்த பீட்ரூட் குச்சி சிப்ஸை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் – 200 கிராம்
  • மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
  • அரிசி மாவு – 3 டீஸ்பூன்
  • சோள மாவு – ஒரு டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
  • மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
  • சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

பீட்ரூட்டை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் ஒரு தட்டில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த கலவையுடன் வெட்டிவைத்த பீட்ரூட்டை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம், பீட்ரூட்டில் உள்ள ஈரப்பதமே போதுமானது. (பீட்ரூட் ஒன்றோடு ஒன்று ஓட்டாத வண்ணம் கலந்துகொள்ளவும்) பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி பீட்ரூட்டைப் பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: