பொழுதுபோக்குதமிழ்நாடு

வாழைக்காய் குழம்பு செய்வது எப்படி?..

சுவையும் மணமும் மிகுந்த செட்டிநாடு உணவுகளில் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் உண்டு. அதோடு, உணவு வகைகளின் பெயர்களுக்கும் ஒரு பின்னணி உண்டு. மசாலாவை நன்கு வதக்கியபிறகு காய்கறிகள் அல்லது வேகவைத்த கடலை வகைகளைச்சேர்த்து, நன்கு சுருண்டு வரும்வரை புரட்டி எடுப்பதால்தான், அதற்குப் பிரட்டல் என்று பெயர். அரிசி கழுவும் மண்டியைக் (தண்ணீரை) கெட்டித்தன்மைக்காகப் பயன்படுத்துவதால், மண்டி என்று பெயர். காய்கறிகள் மற்றும் பருப்பைத் தனித்தனியாக வேகவைத்து எடுத்து, பிறகு தாளித்து இரண்டையும் சேர்த்து லேசாகத் துவட்டி (கலந்து) எடுப்பதாலே அது துவட்டல். இந்த வாழைக்காய்க் குழம்பு நீர்க்க இல்லாமல் கெட்டியாக இருந்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

 • வாழைக்காய் – 2
 • வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 • தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
 • பூண்டு – 6 பல் (தட்டிக்கொள்ளவும்)
 • சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்
 • புளிக்கரைசல் – சிறிதளவு
 • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
 • வறுத்த வேர்க்கடலைப் பொடி – சிறிதளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

 • கடுகு – கால் டீஸ்பூன்
 • உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்
 • வெந்தயம் – சிறிதளவு
 • பெருங்காயம் – சிறிதளவு
 • சீரகம் – கால் டீஸ்பூன்

செய்முறை:

வாழைக்காயைத் தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து சிவந்ததும் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்னர் வாழைக்காயைச் சேர்த்து வதக்கியதும் சாம்பார் பொடி சேர்க்கவும். இதில் புளிக் கரைசல் சேர்த்து உப்பு போட்டு, மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். வாழைக்காய் நன்கு வெந்தபின் வேர்க்கடலை பொடி தூவி இறக்கவும்.

Back to top button
error: Content is protected !!