பொழுதுபோக்குதமிழ்நாடு

ஆப்பிள் அல்வா செய்வது எப்படி?..

மொத்தமாக ஆப்பிள் வாங்கி வைக்கும்போது சில நேரங்களில் சாப்பிட தோன்றாது. இன்றைய காதலர் தினத்தில் ஆப்பிள் அல்வா செய்து ரிலாக்ஸ் டைமில் சாப்பிட்டு இந்தத் தினத்தை இனிப்பாகக் கொண்டாடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இந்த ஆப்பிள் அல்வா சத்தானதும் கூட.

செய்முறை

ஒரு கனமான வாணலியில் கால் லிட்டர் பாலை ஊற்றி அதில் மூன்று துருவிய ஆப்பிள்களைச் சேர்த்து நன்கு வேகவிடவும். சிறிது பாலில் 250 கிராம் கோதுமை மாவைக் கரைத்து நன்கு வெந்த ஆப்பிள் கலவையில் ஊற்றி அரை டீஸ்பூன் கேசரி பவுடரையும் சேர்த்துக் கிளறவும். அதனுடன் 500 கிராம் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிளறி சற்று இறுகியதும் அதில் 159 கிராம் நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். அல்வா பதத்துக்கு வந்ததும் 10 முந்திரி, 10 பாதாம், அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கி விடவும். ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்து நமக்கு பிடித்த வடிவில் வெட்டி அத்துடன் நறுக்கிய முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

சிறப்பு

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான 14 சதவிகித அத்தியாவசிய வைட்டமின்களைக் கொண்டதால் நல்ல முழுக்கப் புத்துணர்ச்சியைத் தரும்.

Back to top button
error: Content is protected !!