தொழில்நுட்பம்

உங்கள் ஆதார் அட்டையை லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி..?

மிகவும் பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்ட ஆதார் எண்ணை பலர் ஹேக் செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில், ஆதார் அட்டை வைத்திருப்பவரின் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை வலுப்படுத்தவே UIDAI, ‘lock and unlock your Aadhaar number’ என்ற அம்சத்தை வழங்கியுள்ளது.

இந்த அம்சம் விர்ச்சுவல் ஐடி அங்கீகாரம் முறையில் செய்யப்படுவதால், ஆதார் எண்ணைப் பயன்படுத்தி எந்த தகவலையும் திருட முடியாது என சொல்லப்படுகிறது.

ஆதார் அட்டையை எஸ்எம்எஸ் மூலம் லாக் செய்வது எப்படி?

1. முதலில் இதற்கு OTP ஐப் பெற உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1947க்கு எஸ்எம்எஸ் அனுப்பவும். எஸ்எம்எஸை GETOTPXXXX என்ற வடிவத்தில் அனுப்ப வேண்டும். அதாவது, GETOTP என்று டைப் செய்து, அதன்பிறகு ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் டைப் செய்து அனுப்ப வேண்டும்.

2. இப்பொது உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு UIDAIல் இருந்து 6 இலக்க OTP வரும். இந்த OTPயை பெற்றவுடன், நீங்கள் மீண்டும் உங்களது மொபைலில் இருந்து, LOCKUID என்று டைப் செய்து அதன்பிறகு உங்கள் ஆதாரின் கடைசி நான்கு இலக்க எண், அதனை தொடர்ந்து நீங்கள் பெற்ற ஆறு இலக்க OTP யை டைப் செய்து 1947 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

3. எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டதும், UIDAI உங்கள் ஆதார் அட்டையை லாக் செய்ததாக பதிலுக்கு உறுதிப்படுத்தும் எஸ்எம்எஸ் அனுப்பும். இதேபோல், ஒருவர் புதிய ஆதார் அட்டையைப் டவுன்லோட் செய்யும் போது ஒருவரின் ஆதார் அட்டையைத் அன்லாக் செய்யலாம்.

ஆதார் அட்டையை எஸ்எம்எஸ் மூலம் அன்லாக் செய்வது எப்படி?

1. முதலில் OTP ஐப் பெற 1947 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இப்பொது நீங்கள் அனுப்பும் எஸ்எம்எஸின் செய்தி, GETOTP அதனை தொடர்ந்து உங்கள் VID அல்லது விர்ச்சுவல் ஐடி எண்ணின் கடைசி ஆறு இலக்கங்கள் என்ற வடிவத்தில் இருக்க வேண்டும்.

2. உங்கள் எஸ்.எம்.எஸ்-க்கு பதில் எஸ்எம்எஸாக ஆறு இலக்க OTP ஐ UIDAI அனுப்பும்.

3. OTP கிடைத்த பிறகு மற்றொரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதற்கு UNLOCKUID என டைப் செய்து, அதன்பிறகு VID அல்லது மெய்நிகர் அடையாள எண்ணின் கடைசி ஆறு இலக்கங்கள் மற்றும் ஆறு இலக்க OTP-யை டைப் செய்து அனுப்ப வேண்டும்.

4. உங்கள் இரண்டாவது எஸ்எம்எஸ் கிடைத்த பிறகு, உறுதிப்படுத்தும் செய்தியை அனுப்புவதன் மூலம் UIDAI உங்கள் ஆதார் அட்டை எண்ணைத் அன்லாக் செய்யும்.

இதையும் படிங்க:  ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி..? எளிய வழிமுறைகள் இதோ..!

எனவே உங்கள் ஆதார் அட்டையை தொலைத்து விட்டால் அதனை லாக் செய்ய இரண்டு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உங்கள் ஆதார் அட்டையை மீண்டும் ஆணையத்திடம் இருந்து புதுப்பித்து பெற்ற பிறகு, கொடுக்கப்பட்ட 1947 எண்ணில் மீண்டும் இரண்டு எஸ்எம்எஸ்-ஐ யுஐடிஏஐக்கு அனுப்பி உங்கள் ஆதார் அட்டையைத் அன்லாக் செய்து கொள்ளலாம். உங்கள் ஆதாரை அன்லாக் செய்தபிறகு ஆன்லைன் மூலமாக கூட அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கு, UIDAI-ன் அதிகாரப்பூரவ இணையத்திற்கு சென்று உங்களது பெயர் மற்றும் பின் கோடினை கொடுத்து கிளிக் செய்யவும். அதன் பிறகு கேப்ட்சா எழுத்துகளையும் கொடுத்து கிளிக் செய்யவும். இப்பொது உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்து, ஓடிபி-யை பெறவும். இதன் பிறகு ஒடிபியை பதிவு செய்து கிளிக் செய்யவும். இதன் பிறகு Validate & document என்பதை கிளிக் செய்ய வேண்டும். இறுதியில் உங்களது ஆதாரின் நகலை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: