ஆரோக்கியம்தமிழ்நாடு

நீண்ட ஆயுளோடு வாழவும் எலுமிச்சை தண்ணீர்! எப்படி எப்போது குடிக்க வேண்டும்?

எலுமிச்சையில் பல்வேறு ஆரோக்கிய நற்குணங்கள் நிரம்பி உள்ளன. இவை எடை இழப்பில் பெரும் பங்கு வகிக்கிறது.

அதிலும் குளிரூட்டப்பட்ட எலுமிச்சை மற்றும் தண்ணீர் தொடர்ந்து பருகுவதன் மூலம் எடையை இழக்க உதவுவது மட்டுமின்றி உடலுக்கு வேறு நன்மைகளும் அளிக்கின்றது.

அந்தவகையில் தற்போது எலுமிச்சை தண்ணீரை எப்படி பருக வேண்டும். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

​எலுமிச்சை தண்ணீரை எப்படி செய்வது?

1 எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை நன்றாக கழுவவும். பின்னர் அதனை மெல்லிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாட்டிலில் எலுமிச்சை துண்டுகளை சேர்க்கவும்.

இந்த தண்ணீரை குறைந்தது 1 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும். இந்த எலுமிச்சை கலந்த நீர் அதன் சுவையை இழக்காமல் 3 நாட்கள் வரை இருக்கும். தினசரி இந்த கலவையை நீங்கள் செய்து கொள்ளலாம்.

நன்மை என்ன?

எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை குடிப்பது உடல் எடையை குறைக்கவும், நமது உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், ஆயுளை அதிகரிக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை கலந்த நீர் சுவையுடன் புத்துணர்ச்சியையும் தருகிறது. மேலும் அதிக ஊட்டச்சத்துக்களையும் நமக்கு தருகிறது.

இந்த எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளதால், இதில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் சத்துகள் நிரம்பியுள்ளன. இது குறைந்த கலோரிகளையும்,அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: