ஆரோக்கியம்

வயிறு எரிச்சலுடன் இருக்கா? இதனை எப்படி எளிய முறையில் சரி செய்யலாம்?

பொதுவாக நம்மில் சிலருக்கு அடிக்கடி வயிற்று எரிச்சல் ஏற்படுவது வழக்கம். வயிற்று எரிச்சலானது ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

அதில் வயிற்றுப் புண், அதிகப்படியான அமில சுரப்பினால் ஏற்படும் அல்சர், அளவுக்கு அதிகமான ஆல்கஹால் பருகுதல், வயிற்றில் நோய்த்தொற்று, மன அழுத்தம் என பலவற்றினால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.

இப்படி எரிச்சலானது அதிகரித்தால், எந்த ஒரு செயலையும் நிம்மதியாக செய்ய முடியாது. குறிப்பாக இந்த எரிச்சலால் இரவில் தூங்க கூட முடியாது. எனவே அவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. அந்தவகையில் தற்போது வயிற்று எரிச்சலை தடுக்க உதவும் ஒரு சில எளியமுறைகளை பற்றி பார்ப்போம்.

அந்தவகையில் வயிறு எரிச்சலை எப்படி எளிய முறையில் தடுக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து இந்த கலவையை குடிக்கலாம். வயிறு எரிச்சல் இருக்கும் போதெல்லாம் இந்த தண்ணீரை குடிக்கலாம். இதை குடித்த சில மணி நேரங்களில் வயிறு எரிச்சல் குறையவில்லை எனில் மீண்டும் ஒரு முறை குடிக்கலாம். கொண்டுள்ளது.

1 டீஸ்பூன் எலுமிச்சை சாறை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கவும். அமில ரிஃப்ளக்ஸ் காரணமாக எரியும் உணர்வை குறைக்க இது உதவியாக இருக்கலாம்.
நன்றாக காய்ச்சிய பாலை குளிரவைத்து குடிக்கலாம். உங்கள் உணவுக்கு பிறகு ஒரு டம்ளர் குளிர்ந்த பாலை எடுத்துகொள்வதை உறுதி செய்யுங்கள். இது வயிற்றில் உள்ள இயற்கையான அமில சமநிலையை மீட்டெடுக்க செய்கிறது.

ஒரு கப் வெற்று தயிரில் உங்கள் வயிற்று எரிச்சலை குணப்படுத்த முடியும். இதை வயிறு எரிச்சல் இருக்கும் போதெல்லாம் சாப்பிடலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே எடுத்துகொள்ளலாம். பசுந்தயிராக இருந்தால் பலன் வேகமாக கிடைக்கும்.

இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து அதை இரண்டு கப் நீரில் கலந்து தேவையெனில் தேன் சேர்த்து தேநீராக்கி குடிக்கவும். இந்த இஞ்சி தேநீர் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் வயிறு எரிச்சலை குணப்படுத்தகூடியவை. தினமும் இரண்டு கப் அளவு இஞ்சி டீ குடிக்கலாம்.

பாதாம் ஊட்டச்சத்து கொண்டவை. இது அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் டிஸ்பெப்சியா அறிகுறிகளை போக்க உதவக்கூடும். பாதாம் வைட்டமின் இ நிறைந்தவை. வயிறு எரிச்சலுக்கு பாதாம் உதவக்கூடியவை.

5 அல்லது 6 பாதாமை ஊறவைத்து தோல் உரித்து உணவுக்கு பிறகு மென்று சாப்பிட்டு வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும். வயிறு எரிச்சல் தணியும் வரை உணவுக்கு பிறகு இதை சாப்பிட்டு வரலாம்.

க்ரீன் டீ பேக், அதிமதுரம், இஞ்சி இனிப்புக்கு தேவையெனில் தேன் சேர்க்கலாம். இந்த மூன்றூம் கலந்த தேநீர் வயிறு எரிச்சலை தடுக்க செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: