ஆரோக்கியம்

முக அழகை கெடுக்கும் கருவளையத்தை எப்படி எளிய முறையில் போக்கலாம்?

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்று தான் கருவளையம். அத்தகைய கருவளையம் சிலருக்கு அதிகம் இருக்கும். ஆனால் அது எதற்கு வருகிறது என்று பலரும் தெரியாமல் இருக்கின்றனர்.

கருவளையங்கள் உண்மையில் வருவதற்கு காரணம் நம்முடைய பழக்கவழக்கங்களே. அந்த ஒரு சில பழக்கவழக்கங்களால் நம் கண்களைச் சுற்றி கருப்பாக தோன்றும். அதுமட்டுமல்லாமல் ஒரு சில நோய்கள் இருந்தாலும் கருவளையமானது வரும்.

இருப்பினும் முகத் தோற்றத்தைக் கெடுக்கும் கருவளையத்தை வீட்டுக் குறிப்புகளைக் கொண்டு எளிய முறையில் நீக்கிவிடலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

உருளைக் கிழங்கு சாறு எடுத்துக்கொண்டு கண்களைச் சுற்றிலும் பஞ்சால் ஒத்தடம் தர வேண்டும். இப்படி தினமும் இரவு செய்து வாருங்கள். கருவலையம் நீங்கும்.

தக்காளி சாற்றில் எலுமிச்சை சாறு பிழிந்து பருத்தித் துணியில் நனைத்து கண்களைச் சுற்றி தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இதை தினம் இரண்டு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

க்ரீன் டீ பையை தண்ணீரில் நனைத்து இரு கண்களிலும் அப்படியே வைத்து 10 நிமிடங்கள் அமரவும். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். கண்களைச் சுற்றிலும் கருமை நீங்கிவிடும்.

ஆரஞ்சு பழச் சாறை கண்களை மூடி ஒத்தடம் தாருங்கள். பின் ஆரஞ்சு பழ சாறில் முக்கி எடுத்த பருத்தித் துணியை கண்களில் வைத்து ஐந்து நிமிடங்கள் ஓய்வு எடுங்கள். இப்படி தினமும் தொடர்ந்து செய்து வாருங்கள். கருவலையம் பறந்து போகும்.

வெள்ளரியின் சாறு பிழிந்து அதை பருத்தித் துணியால் நனைத்து ஒத்தடம் கொடுங்கள். பின் வெள்ளரி ஸ்லைசை கண்களில் 5 நிமிடங்கள் வைத்துக் ஒய்வெடுங்கள்.

கற்றாழை அழகு குறிப்பில் எப்போதும் இடம் பெறும். அந்த வகையில் கற்றாழை கருவலையத்தையும் நீக்கி கண்களுக்குக் குளிர்ச்சி தரும். கற்றாழை சாறு எடுத்து அதை பஞ்சில் நனைத்து கண்களைச் சுற்றித் தடவவும். இதை தினமும் செய்து வந்தால் சிறந்த ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் படிங்க:  கழுத்தில் கருப்பாக உள்ளதா? இதனை மறைக்க ஒரு சூப்பரான டிப்ஸ்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: