தமிழ்நாடுதொழில்நுட்பம்

பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை எடுப்பது எப்படி..? ஆன்லைனில் எளிய வழிமுறை..!

மத்திய அரசின் தனி மனித அடையாளமாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை தற்போது பிறந்த குழந்தைகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை எடுப்பது ஆன்லைன் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வழங்கியுள்ள ஆதார் அட்டை அனைத்து அரசு, வங்கி போன்ற சேவைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. தனி மனித அடையாளம் துவங்கி அனைத்து தகவல்களும் ஆதார் மூலம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது பிறந்த குழந்தைக்கும் கூட ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. அதன்படி குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுப்பதற்காக குழந்தையின் பிறப்பு சான்றிதழுடன் பெற்றோர்களின் ஆதார் உள்ளிட்ட சில தகவல்கள் தேவை.

அதே போல 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்க குழந்தையின் கைரேகை உட்பட்ட பயோமெட்ரிக் தகவல்கள் கேட்கப்படும். மேலும் பிறந்த குழந்தையின் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் குழந்தைக்கு 5 வயதாகும்போது 5 விரல் கைரேகையுடன் கூடிய பயோமெட்ரிக் தகவல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இந்த சேவைகளை மேற்கொள்ள அருகிலுள்ள ஆதார் மையத்தை அணுகலாம். இந்த சேவைகள் தற்போது ஆன்லைன் வழியில் எளிதாக்கப்பட்டுள்ளது. அதன் படி குழந்தைக்கு ஆதார் அட்டை எடுக்க,

  • UIDAI யின் uidai.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.
    அதில் Aadhaar Card Registration என்பதை கிளிக் செய்யவும்.
  • அங்கு குழந்தையின் பெயர், பெற்றோர்களின் மொபைல் எண், மெயில் ஐடி போன்ற தகவல்களை பதிவு செய்யவும்.
  • இதற்கு பிறகு முகவரி, மாவட்டம், மாநிலம் போன்ற தகவல்களை கொடுக்கவும்.
  • பிறகு Fix Appoint tab என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் ஆதார் அட்டைக்கான பதிவு தேதியை தேர்வு செய்யவும்.
  • பிறகு அருகிலுள்ள ஆதார் மையத்தை தேர்வு செய்து பிற சேவைகளை தொடரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: