தொழில்நுட்பம்

ஆதார் கார்டு உண்மையா, போலியா? கண்டுபிடிப்பது எப்படி?

உங்களது ஆதார் கார்டு அதிகாரப்பூர்வமானதுதானா அல்லது போலியானதா என்று கண்டுபிடிப்பது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

how to check where your aadhaar has been used 1523686813

ஆதார் இல்லாமல் எதுவும் இல்லை!

தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் அவசியம். குறிப்பாக வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் வந்துள்ளன. இவ்வாறாக தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது.

போலியான ஆதார்!

aadhar card cover

ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் அடங்கிய எண்ணாகும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் எண் அதிகாரப்பூர்வமானதுதானா என்ற சந்தேகம் இருக்கலாம். ஏனெனில், போலியான ஆதார் அட்டைகள் வைத்திருப்பதாகவும், ஒரே ஆதார் எண்ணில் பல்வேறு ஆதார் அட்டைகள் வைப்பதிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. எனவே நமது ஆதார் எண் உண்மையானதுதானா என்று பரிசோதிப்பது அவசியமாகும். ஆதார் எண்ணைச் சரிபார்க்க நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை. நீங்களாகவே ஆன்லைன் மூலமாக மிக எளிதாகப் பரிசோதிக்கலாம்.

How to UpdateChange Your Mobile No. in Aadhaar Card

சரிபார்ப்பது எப்படி?

>> ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ முகவரியான https://uidai.gov.in/ என்ற வலைப்பக்கத்தில் செல்லவும்.

>> ’My Aadhaar’ என்ற வசதியின் கீழ் ’verify an Aadhaar number’ என்பதை கிளிக் செய்யவும்.

>> உங்களுடைய ஆதார் எண்ணைப் பதிவிட்டு, அதன் கீழ் கேப்ட்சா குறியீட்டையும் பதிவிட்டு ‘proseed to verify’என்பதை கிளிக் செய்யவும்.

>> உங்களது ஆதார் எண் அதிகாரப்பூர்வமானதாக இருந்தால் ’Aadhaar Verification completed!’ என்ற தகவல் வரும்.

>> புதிதாக ஓப்பன் ஆகும் இந்தத் திரையில் உங்களது வயது, பாலினம், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் தோன்றும்.

>> mAadhaar மொபைல் செயலி மூலமாகவும் நீங்கள் சரிபார்க்கலாம். இச்செயலியில் “QR குறியீடு ஸ்கேனர்” என்பதைத் திறந்து, ஆதார் அட்டையில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து சரிபார்க்கலாம்.

Back to top button
error: Content is protected !!