தொழில்நுட்பம்

பிஎஃப் கணக்கில் மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது வாடிக்கையாளர்களுக்காகப் பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரை மாற்றுவது. UAN கணக்கு எண்ணை ஆக்டிவேட் செய்வது போன்ற சேவைகளும் இதில் அடக்கம். பிஎஃப் பேலன்ஸைக் கூட மிக எளிதாகப் பார்க்க முடியும். பேலன்ஸ் பார்ப்பதைத் தொடர்ந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கோருவது மொபைல் நம்பரை எவ்வாறு மாற்றுவது என்பதுதான். அதை எளிதாக எவ்வாறு மாற்றுவது என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

* https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்தில் சென்று உங்களுடைய பிஎஃப் கணக்கில் லாகின் செய்ய வேண்டும்.

* திரையில் தோன்றும் பக்கத்தில் ‘manage’ என்ற வசதியின் கீழ் contact details கிளிக் செய்யவும்.

* பின்னர் ‘check mobile number’ என்பதை கிளிக் செய்தால் புதிய பக்கம் திறக்கும்.

* புதிய மொபைல் நம்பரை இரண்டு முறை பதிவிடவும்.

* ‘Get Authorization Pin’ என்பதை கிளிக் செய்தால் உங்களது மொபைல் நம்பருக்கு OTP நம்பர் வரும்.

* OTP நம்பரைப் பதிவிட்டு ‘submit’ பட்டனை கிளிக் செய்யவும்.

* இப்போது உங்களது புதிய மொபைல் நம்பர் அப்டேட் ஆகிவிடும்.

மொபைல் நம்பரை மாற்றுவது ஒரு பக்கம் இருக்கட்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தற்போது 6 கோடி சந்தாதார்களுக்கு 8.5 சதவீத வட்டிப் பணத்தை டெபாசிட் செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் பேலன்ஸைப் பார்த்து பணம் வந்துவிட்டதா என்று தெரிந்துகொள்ளலாம். பிஎஃப் பேலன்ஸ் பார்க்க உமாங் ஆப், எஸ்எம்எஸ், EPFO போர்ட்டல் போர்ட்டல் போன்ற வசதிகள் உள்ளன.

Back to top button
error: Content is protected !!