தொழில்நுட்பம்

ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை பண்றது எப்படி?

இந்தியாவிலிருந்து வேறு எந்த நாட்டுக்கும் பயணிப்பதற்கு பாஸ்போர்ட் கட்டாயமாகும். முன்பெல்லாம் பாஸ்போர்ட் வாங்குவதற்கு இடைத்தரகர்களை நாடிச் செல்ல வேண்டியிருக்கும். அதில் வீண் செலவும் அலைச்சலும் ஏற்படும். ஆனால் இப்போது ஆன்லைன் மூலமாகவே மிகச் சுலபமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். பாஸ்போர்ட் சேவா கேந்திரா மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

* passportindia.gov.in/AppOnlineProject என்ற முகவரியில் சென்று REGISTER NOW என்பதை கிளிக் செய்யவும்.

* முதலில் PASSPORT OFFICE தேர்வுசெய்து REGISTER TO APPLY AT என்பதைக் கிளிக் செய்யவும்.

* அதன் பின்னர் உங்களுக்கு அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை PASSPORT OFFICE என்பதைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.

* GIVEN NAME என்பதில் உங்களது பெயரைப் பதிவிட்டு, SURNAME என்பதில் உப பெயரைப் பதிவிடவும். DATE OF BIRTH என்பதில் உங்களது பிறந்த தேதியைப் பதிவிடவும்.

* இதன் பின்னர் உங்களது ஈமெயில் ஐடியைப் பதிவிட்டு இதே ஈமெயில் ஐடியை உங்களது லாகின் ஐடியாக வைத்துக்கொள்ள விரும்பினால் இதையே தேர்ந்தெடுக்கலாம். அதற்கு DO YOU WANT YOUR LOGIN ID TO BE SAME AS EMAIL ID என்பதில் YES அல்லது NO கொடுக்கவும்.

* அடுத்ததாக விண்ணப்ப வகையைத் தேர்ந்தெடுக்கவும். அதாவது SELECT APPLICATION TYPE என்பதில் PASSPORT என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

* பின்னர் TYPE OF SERVICE என்பதில் FRESH என்பதைக் கிளிக் செய்யவும்.

* APPLICANT AGE என்பதில் உங்களது வயது மற்றும் REQUIRED SCHEME என்பதில் NORMAL, TATKAAL ஆகியவற்றை தேர்ந்தெடுக்கவும்.

* அதன் பின்னர் எத்தனை PAGES என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உதாரணம்: 36 PAGES, 60 PAGES.

* இறுதியாக கட்டணத்தைச் செலுத்திவிட்டு, APPONTMENT AVAILIBILITY என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தையும் தேதியையும் தேர்ந்தெடுத்து Submit கொடுக்கவும்.

இந்த விண்ணப்ப முறை முடிந்த பிறகு காவல் அலுவலர் சரிபார்ப்பு நடைபெற்று, பாஸ்போர்ட்டுக்கு ஒப்புதல் கிடைத்து வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும்.

Back to top button
error: Content is protected !!