உலகம்

மூதாட்டி வேடத்தில் தடுப்பூசி போட வந்த இரு பெண்கள்.. வசமாக சிக்கியது எப்படி?..

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஓர்லாண்டாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக இரண்டு பெண்கள், தங்களை வயதானவர்களை போல வேடமிட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையிலும், உயிரிழப்பு எண்ணிக்கையிலும் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

தற்போது, கொரோனாவுக்கு அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன்படி, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஓர்லாண்டாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக, இரண்டு பெண்கள் வயதானவர்கள் போல வேடமிட்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி போட வந்த அந்த இரு பெண்களும் மூதாட்டியை போல வேடமிட்டு வந்ததை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்தப் பெண்களில் ஒருவருக்கு 34 வயது மற்றொருவருக்கு 44 வயது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரு பெண்களும், தங்களது இரண்டாவது தடுப்பூசி பெறுவதற்காக வந்தபோதுதான் அதிகாரிகளிடம் சிக்கிள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் தங்களது முதல் தடுப்பூசி எப்படி போட்டுக்கொண்டனர் என்பது புரியாத புதிராக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பெண்களின் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் சுகாதார அட்டையில் இருந்த வயது வித்தியாசமாக இருந்த காரணத்தால் தான் அவர்கள் சிக்கிக்கொண்டதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Back to top button
error: Content is protected !!