தமிழ்நாடு

பாஜவுக்கு எத்தனை சீட்டு ?.. 21ம் தேதி முடிவாகிறது..

தமிழக முக்கிய கட்சிகளான அதிமுகவும், திமுகவும் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்வதற்கான தேதிகளை அறிவித்துள்ளன.அடுத்த கட்டமாக மநீமமும் தேதியை அறிவித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்து கட்சிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிமுக கூட்டணியை பொருத்தவரை முக்கிய கட்சியான பாஜகவிடம் பேச்சுவார்த்தையை முடித்து விட்டு மற்ற கட்சிகளுக்கு வரலாம் என இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் நினைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காரணம் ஏற்கனவே பாஜ தங்களுக்கு சாதகமான 60 தொகுதிகளை குறிப்பிட்டு அதிமுகவிடம் கொடுத்துள்ளது. இதில் 40 தொகுதிகள் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளது. ஆனால் அதிமுகவோ சிறுபான்மையினர் ஓட்டுகளும் கிடைத்தால் தான், ஆட்சியை தக்கவைக்க முடியும் என நம்புகிறது. அந்த அடிப்படையில், பா.ஜ., – 20; பா.ம.க., – 25; தே.மு.தி.க., – 10; த.மா.கா., – 7; புதிய தமிழகம் – 2 என பட்டியல் தயார் செய்து வைத்திருக்கிறது.

பாஜகவுடனான பேச்சுவார்த்தை இம்மாத 21ம் தேதி இறுதியாகும் என அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. அன்றைய தினம் டில்லி அதிமுக அலுவலக திறப்பு விழாவிற்காக இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் டில்லி செல்கின்றனர். அப்போது தொகுதி பங்கீடு குறித்து, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் உடன்பாட்டில் அவர்கள் கையெழுத்திட உள்ளனர். தொடர்ந்து ஜெயலலிதா பிறந்த நாளான, 24ம் தேதி மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு முடிக்க, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!