ஆன்மீகம்

உங்கள் பண வருவாய் எப்படி இருக்கும்?

சிலருக்கு பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். எவ்வளவு செலவு செய்தாலும் சேர்ந்து வரும் பணம் அதிகமாகவே இருக்கும். வேறு சிலருக்கு பண வரவும் செலவும் ஒரே அளவில் சமமாக இருக்கும். ஆனால் பணம் சேமிப்பில் தங்காமல் இருக்கும். இவர்கள் மிகவும் சிக்கலானவர்கள். அதாவது தீர்வு கிடைத்தாலும் பயன்படுத்த மாட்டார்கள். ஆனாலும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு வழிகாட்டுகிறேன் என்று அறிவுரை சொல்வது வீண். சொல்பவர் நேரம் தான் வீணாகும். மூன்றாவதாக எந்த தவறும் செய்யாமல் இருந்தாலும் பணம் வருவாய் குறைவாகவும், செலவும், கடனும் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைத்தால் பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர முடியும்.

தீர்வு

இந்த பிரச்சனைகளையும், தீர்வுகளையும் கை விரல்களில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். ஐந்து விரல்களையும் சேர்த்து வைத்து கைகளை பார்த்தால் இடைவெளி அதிகமாக உள்ள ஆண்கள் எனில் இவர்கள் இரண்டாவது சொல்லப்பட்ட ரகத்தில் இருப்பார்கள்.

கவலையில்லை

பொதுவாக பெண்கள் கைகளில் விரல்களுக்கு இடையே இடைவெளி இருப்பது நல்லது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாருக்கும் ஒரே விதிகள் கைரேகை சாஸ்திரத்தில் இல்லை. எனவே, ஆண்களுக்கு கைகளில் இடைவெளி இல்லாமல் இருந்தால் நல்லது. அதற்கு நேர் மாறாக பெண்களுக்கு கைகளில் இடைவெளி இருந்தால் அவர்களை சார்ந்தவர்களுக்கே இந்த அமைப்பு நன்மைகள் தரும். இவர்களுக்கு பெரும்பாலும் அவர்களை சார்ந்தவர்களால் அதாவது உறவுகளால் பணம் தொடர்பான சில சிக்கல்கள் இருக்கும். ஆனால் தீரக்கூடிய பிரச்சனைகளாக இருக்கும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: