ஆரோக்கியம்தமிழ்நாடு

சிறு வயதிலே இளநரையா? இதனை எப்படி தடுக்கலாம்?

பொதுவான இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு கூட நரைமுடி பிரச்சினை வந்துவிட்டது.

ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை, உணவு பற்றாக்குறை போன்றவையும் முன்கூட்டியே நரை விழ தொடங்க காரணங்களில் ஒன்றாகிவிடுகிறது.

இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவதே நல்லதாகும். இல்லாவிடின் இது வளர வளர தீவிர பிரச்சினையாக மாறிவிடும்.

அந்தவகையில் குழந்தைகளில் நரை முடி வருவதை தீவிரமாகாமல் தடுக்க உதவும் சில எளிமையான பாதிப்பில்லாத ஒரு சில குறிப்புக்களை பற்றி இங்கே பார்ப்போம்.

  • தேங்காய் எண்ணெய் உச்சந்தலையில் ஈரப்பதத்தை அளித்து முடியின் வலிமையை மேம்படுத்த செய்கிறது. வளரும் பிள்ளைகளின் நரைமுடி தீர்வுக்கு நீங்கள் தேங்காய் எண்ணெயுடன் நெல்லிக்காய் விழுதை சேர்த்து வேகவைத்து பிள்ளைகளின் உச்சந்தலையில் மசாஜ் செய்துவிடவும். இது படிப்படியாக நரைமுடியை குறைத்து மேலும் தீவிரமாகாமல் தடுக்க செய்யும்.
  • பாதாம் எண்ணெய் மற்றும் நெல்லிச்சாறு இரண்டையும் சம அளவில் கலந்து காய்ச்சி கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். இதை தினசரி பிள்ளைகளின் உச்சந்தலையில் தடவி இலேசாக மசாஜ் செய்தாலே போதுமானது. இளநரையை தடுக்க தவிர்க்காமல் தினமும் பயன்படுத்துங்கள்.
  • தேங்காய் எண்ணெயை இரும்பு வாணலியில் இலேசாக கொதிக்க வைத்து அதில் கறிவேப்பிலை விழுதை அரைத்து சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். இதை தினசரி தலையில் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் குழந்தையின் நரைமுடி படிப்படியாக குறையக்கூடும். பசுமாட்டிலிருந்து எடுத்ததாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு தலைக்குளியலின் போது ஒரு மணி நேரம் முன்னதாக உச்சந்தலை முடியில் தடவி பிறகு தலைக்கு குளிக்க வைத்தால் இளநரை மேலும் வராமல் தவிர்க்கலாம்.
  • பாதாம் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைக்கவும். இதை குழந்தையின் உச்சந்தலையில் தடவி சுமார் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள். பிறகு மைல்டான அதிக இரசாயனம் இல்லாத ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசி எடுங்கள்.

இதையும் படிங்க:  தமிழகத்தில் இன்று 11 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: