தமிழ்நாடு

வீட்டுவசதி வாரியத்தில் மீண்டும் தவணை முறையில் வீடுகள் – அமைச்சரின் அறிவிப்பு!!

தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு மீண்டும் தவணை முறையில் வீடுகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அமைச்சர் சு. முத்துசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு பின்னர் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகஸ்ட் 13ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர், வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர், தொடர்ந்து தமிழக அரசின் துறைகளின் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் கூட்டம் நடந்து வருகின்றது. தொடர்ந்து தினமும் வரிசையாக துறை வாரியான விவாதம் நடந்து வருகின்றது. அதன்படி, இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் அமைச்சர் சு. முத்துசாமி 30 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

மிழகத்தில் மொத்தம் 9 இடங்களில் சுமார் ரூ.950 கோடி செலவில் 6,000 புதிய குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டுள்ளதாக குடிசை மாற்று வாரியம் தகவல் அளித்தது. இதையடுத்து, முதல்வர் முக ஸ்டாலின், குடிசை மாற்று வாரிய துறையின் பெயரை மாற்றி, அவை ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என அழைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை பாடிக்குப்பத்தில் ரூ.62.77 கோடி மதிப்பில் 155 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை அயனாவரத்தில் ரூ.86.31 கோடி மதிப்பில் 216 அடுக்குமாடி குடியிருப்புகள், ஈரோடு மாவட்டம் சம்பத் நகர் மற்றும் பெரியார் நகரில் 40.60 கோடி மதிப்பில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் குறைவான வருமானம் உள்ள மக்களுக்கு மத்திய வருவாய் பிரிவுகளின் கீழ் வீடு வாங்குவோரின் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் தவணை முறை திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தை ரூ.20 கோடி செலவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பழைய மகாபலிபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்க பக்கிங்காம் கால்வாய் மீது சுமார் ரூ.180 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  10 ஆண்டுகளுக்கான செம்மொழி விருதுகள் - அறிவித்தது தமிழக அரசு!!
Back to top button
error: